"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"
_______________________________________கல்லிடைக்கீரன்
(ஓலைத்துடிப்புகள் 109)
ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு
உறையும் உழுவை துஞ்சுதல் அறியா
அடர் சுரம் நுழைஇ ஆறுபடுகடாம்
அஞ்சுதல் அறியா நீளிலை எஃகமொடு
நீள வைகும் கணைக்கால் கழல
இலஞ்சி பழனச் செந்நிலக் குன்றன்
அடுபரல் முரலும் கொடு இடைக் கழிய
துடியென இசையும் நெஞ்சொடுக் கிளந்து
கல்லென ஒலிக்கும் கொல்வனத்து ஆரிடை
பயிற்றும் சொல்லே அவள் பேர் சாற்றும்.
இறைய நீட்டும் வளையின் வளையின்
இன்னொலி உய்க்கும் பல்பாற்பட்ட
கான்பேராறு கவி இருள் புகுந்துழி
சுரும்பின் நுண்சிறை அதிர வாங்கு
வான்பூச் சினை இடற நோக்கும்.
இறைய நீட்டும் வளையின் வளையின்
இன்னொலி எறியும் மைவிழி தேடி
கலிக்கும் ஒலிமென் கூந்தல் அடர்த்த
ஊழி நீள்க்கும் கானாறு தேய்க்கும்
கழி நெடில் அத்தம் இனிதுடன் நந்தும்.
_____________________________________________
அகம் 52..நொச்சி நியமங்கிழார் பாட்டின் 5 ஆம் வரியை
முதல் வரி ஆக்கி நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் இது
_____________________________________கல்லிடைக்கீரன்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக