தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன
__________________________________________கல்லிடைக்கீரன்
ஓலைத்துடிப்புகள் 108
வாங்கு அமை ஓமையுடன் உரசியக்கால்
தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன
தோன்றா நின்றாள் குவளையுண் கண்ணாள்
பழுனிய தேறல் தூவும் காற்றிடை
மன்றல் கொண்ட மணித்திரள் குன்றன்
பணைத்தோள் திண்ணன் பார்வை உள்ளி.
மீட்டும் ஒரு கால் தோன்றா நின்றாள்
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் அன்ன
உள்ளே நீறும் தீங்கனிப் பாகர் அழலின்
ஒத்த மெய்ப்பாடு வானம் தோய் சிமையம்
உலகே பார்த்து நாணிய வைத்ததென்னே
கலிமா நெடுந்தேர் செலீஇய வைத்த
கார் அறிவாளன் மழை செய்து தந்தான்.
படுமணி இரட்ட ஒலி கேட்டு அவளும்
உள்ளுள் மற்றோர் களிதேர் உருட்டினள்
மண்ணும் விண்ணும் மண்ணிய போல
தண்டுளி அருவி இழைந்தனள் மன்னே!
____________________________________________
இது நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை
..........கல்லிடைக்கீரன்
_______________________________________________
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக